Flash News

HotVadai provides the Latest news about Tamil Cinema, Actress, Actress, Gallery, Movie Reviews, Tamil film Trailers & Trending news of Social Media.

Powered by Blogger.

Blog Archive

Mega Menu
  • Anything

    These are widget areas. You can put anything you want in here.

    Mail Instagram Pinterest RSS

துன்பத்தில் தவிக்கும் சூர்யா குடும்பம் !! (சினிமாவில்)

     தவனில் ஆரம்பித்து அஞ்சான் வரை தொடர் தோல்விகள். சூர்யாவிற்கு என்ன ஆனது? ஆதவனுக்கு பிறகு, இயக்குனர்  K.S. ரவிக்குமார் காணமல் போய்விட்டார். பிறகு வந்த  ரத்த சரித்திரம், சுத்தமாக எடுபடவில்லை. மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட  7ம் அறிவு திரைப்படமோ, A. R. முருகதாசின் முதல் தோல்வி படமாக அமைந்தது.
Surya & Karthi
துன்பத்தில் தவிக்கும் சூர்யா குடும்பம் !! 
சூர்யாவை வைத்து "அயன்" என்ற படத்தை இயக்கி, வெற்றி இயக்குனர்களின் வரிசையில் மட மட வென உயர்ந்த K.V. ஆனந்த், தனது முதல் தோல்வி படத்தை சூர்யா மூலம்  (மாற்றான்) பதிவு செய்தார்.

இந்த தோல்வி படங்களின் இடையே ஒரே ஒரு ஆறுதல், இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த  "சிங்கம்-2" மட்டுமே.

ஒருபக்கம் சூர்யாவின் படங்கள் காலைவாறி  வந்த வேளையில், இவருடைய தம்பி "கார்த்தி" நடித்து வந்த படங்களுக்கும் இதே நிலையே!! 2012ம் ஆண்டு சகுனி திரைபடத்தில் தொடங்கி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜ என, தொடர் தோல்வியில் இருந்த கார்த்திக்கு பிரியாணி மற்றும் மெட்ராஸ் திரைப்படம் ஓரளவிற்கு பெருமூச்சு விட வைத்திருகிறது

சூர்யா நடித்து வெளிவந்த,  தமிழ் சினிமாவே புரட்டி போடவைத்த படம் "அஞ்சான்".  லிங்குசாமி தன் மொத்த வித்தையையும் இறக்கிய படம்.  பாவம் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. சூர்யாவிடமிருந்து தப்பி, அடுத்த படத்தை(கத்தி) வெற்றியாக்கிய ஒரே டைரக்டர் A.R.முருகதாஸ் மட்டுமே . 

அடுத்து வெங்கட்பிரபு. அவரை பற்றி எல்லோருக்கும் தெரியும் கதை இல்லை என்றாலும் அவர் தம்பி பிரேம்ஜி மற்றும் அஜித் இன் எதாவது சீன கண்டிப்பாக இருக்கும். அடுத்த படமாவது சூர்யாவிற்கு வெற்றி படமாக அமையும் என நம்புறோம்.

எங்கள் தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் FaceBook  மற்றும் Twitter பக்கங்களில் Follow  செய்யவும். உங்கள் நண்பர்களிடம் பகிரவும்.  தங்கள் ஆதரவிற்கு நன்றி !! ;-)
HotVadai Team 

2 comments:

உங்க ரியாக்ஷன இங்க கொட்டுங்க